இந்திய தேசிய ராணுவம் (Indian National Army - INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட இராணுவ பிரிவு . 1942 இல் சிங்கப்பூர் ஜப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், இராஷ் பிஹாரி என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்ட ஆங்கிலேய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர். இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார்.ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. நேதாஜி அவர்களின் இந்திய இடைக்கால அரசான ஆசாத் ஹிந்தின் படைத்துறையாக செயலாற்றியது. ஜப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மாவில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது.\n \n ஜப்பானிய இராணுவத்துடன் கூட்டு ...