1933ல் ஒரு காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆஸ்திரியாவில் தங்கியிருந்தார் நேதாஜி. இந்த காயம் அவரது காதலுக்கு வித்திட்டது. ஆம்! அங்கு தான் தனது காதல் துணையை கண்டார் நேதாஜி.
நேதாஜி அவரது காதல் துணை எமிலியை இருவருக்கும் பொதுவான நண்பராக திகழந்த மருத்துவர் மதூர் என்பவர் மூலமாக தான் சந்தித்தார். எமிலியின் ஆங்கிலம் மற்றும் டைபிங் திறன் சிறப்பாக இருந்தது. எனவே, தனது தி இந்தியன் ஸ்ட்ரகில் எனும் புத்தகத்தை எழுத எமிலியை வேலைக்கு அமர்த்தினார் நேதாஜி.
நேதாஜியின் குடும்பத்தாருக்கே இவர் திருமணம் செய்துக் கொண்டதும், அவருக்கு அனிதா எனும் பெண் குழந்தை இருப்பதும் தெரியாது. ஒருமுறை எமிலி நேதாஜியின் சகோதரர் சாரத் சந்திர போஸிற்கு கடிதம் எழுதினார். அப்போது தான் அவர்கள் இவரது திருமணம் பற்றி அறிந்ததாக அறியப்படுகிறது.
0 Comments